Man arrested who scold and threatened woman

திருவாரூர் 

திருவாரூரில் முன் விரோதம் காரணமாக பெண்னை அசிங்கமாக திட்டி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் செல்வரெத்தினம். இவரது மனைவி விஜிலா (27). 

சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது விஜிலாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் ராபின் ராஜ் (20) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இந்த நிலையில் சனிக்கிழமை இருவரும் எதிரெதிரே சந்தித்தபோது, அவர்களுக்குள் மீண்டும் வாய்த் தகராறு ஏற்பட்டது. 

அப்போது ராபின் ராஜ், விபிலாவை அசிங்கமாக திட்டியும், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசியும் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

பின்னர், பயந்துபோன விஜிலா இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். பின்னர், ராபின் ராஜை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.