அரபிக் கடலில் திருவனந்தபுரம் அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், லட்சத்தீவு மற்றும் குமரிக்கடல் நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இதற்கு 'மஹா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  தமிழகத்தில் குமரி, நெல்லை, மதுரை, விருதுநகர்,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, , வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் நாளை வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்   என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் எடப்பாடி, சங்ககிரி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்தது. தற்போது மதுரை, விருதுநகர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.