சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

கடந்த 5 ஆம் தேதி, சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் ஆணையை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்றும், மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டிக்கும் சேலம், கோவையில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.

மேலும், சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்தும் மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.