செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்டவர்களுடன் டாடா ஏஸ் வாகனம் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது.

மதுராந்தகம் அருகே லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்டவர்களுடன் டாடா ஏஸ் வாகனம் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது. முன்னால் சென்ற லாரி மீது டாடா ஏஸ் மோதிய நிலையில், பின்னால் வந்த கனகர வாகனம் டாடா ஏஸ் மீது பயங்கரமாக மோதியது. 

இதையும் படிங்க;- அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது.? கட்சியை வழிநடத்த யாருக்கும் தகுதி இல்லை.! ஜெ. நினைவு நாளில் தீபா ஆவேசம்

இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பயணம் செய்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருவண்ணாமலை தீபத்திற்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை நடந்த விபத்தால் அப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்… விண்ணை முட்டும் பக்தர்களின் அரோகரா முழக்கம்!!