கோயிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து! லாரி மோதியதில் அப்பளம் போல் நொறுங்கி கார்! 7 பேரின் நிலை என்ன?
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.
மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இதையும் படிங்க: TN Weather Report: சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பட்டையை கிளப்பபோகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த பார்வதி மற்றும் சிறுவன் சச்சின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் 5 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: School Students: 1000 ரூபாயை விட்டுடாதீங்க! பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.