Asianet News TamilAsianet News Tamil

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மதுரையில் 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினையே கிடையாது - செல்லூர் ராஜூ

கூட்டுக்குடிநீர் திட்டம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் மதுரையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினையே இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ யோசனை தெரிவித்துள்ளார்.

madurai will not face a drinking water issue coming 50 years if mullaperiyar water scheme implemented vel
Author
First Published Oct 5, 2023, 10:31 AM IST | Last Updated Oct 5, 2023, 10:31 AM IST

மதுரை மேற்கு சட்ட மன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் 71-வது வார்டு தெற்குதெரு நியாய விலைக்கடை மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைத்திட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில், “மதுரை மேற்கு தொகுதி, பழங்காநத்தம் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றினோம். மேலும் 15 லட்ச ரூபாய்க்கு கூடுதல் கட்டடம் கட்டினோம். மேற்கூரை அமைத்தல், வளாகங்கள் அமைத்தல் என ஐம்பது லட்சத்திற்கு மேலாக தத்தெடுத்தது போல் பள்ளிகளுக்கு பல்வேறு பணிகளை செய்தோம்.

இதனால் 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் 2 மாணவிகள் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்து. மேற்கு தொகுதி மேம்பாட்டிற்காக 60 லட்சம் ரூபாய் செலவில் இப்பகுதியில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 1296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அமைச்சர் நேரு விடவும் தெரிவித்து பணியை விரைவு படுத்த கூறியுள்ளோம். 

ஷாக்கிங் நியூஸ்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?

குடிநீர் திட்டப்  பணிகளை நிறைவாக முடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  அதிகாரிகளிடம் கேட்டபோது டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ளனர். ஆனால் பணிகள் எந்த அளவு நடைபெற்று வருகிறது என தெரியவில்லை. விரைவாக முடிக்க வேண்டும் என நகர்ப்புறத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். அதே போல் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் அவர்கள் தலையிட்டு இந்தத் திட்டத்தின் கீழ் பணம் வசூல் பண்ணுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் பதிப்பது தொடர்பாக 8000 முதல் 25 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனை கண்காணிக்க வேண்டும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முடிக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகள் பம்பிங் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் முழுமை பெற்று செய்ய வேண்டும். அவசரகதியில் இந்த குடிநீர் திட்டப் பணிகளை செய்யக்கூடாது. ஏழை எளிய மக்களுக்கு பயன் படக் கூடிய திட்டமான இந்த திட்டத்தினை சிறப்பாக செய்ய வேண்டும். சாக்கடை கலப்பு இருக்கக் கூடாது. ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தினோம். ஆனால் தி.மு.க.,ஆட்சியில் டெண்டரை மாத்தி இந்த திட்டத்தில் குளறுபடியானது. அதனால் சாலை எங்கும் கழிவு நீர்கள் செல்லும் அவலம் இருந்து வருகிறது. 

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தினால் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் பயன்பெறும். இதனால் வரும் 50 ஆண்டுகளுக்கு மதுரையில் தண்ணீர் பிரச்சினை இருக்காது. அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்தது போல் ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிகளுக்கும் விளையாட்டு அரங்கங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். என்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் காண்பிக்கப்பட்டு அதற்கான கூர்வாங்கு பணிகள் இன்னும் நடைபெறாமல் உள்ளது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் விரைவாக செய்ய வேண்டும். 

காலையிலேயே முதல்வருக்கு அதிர்ச்சி தகவல்! திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை சுத்துப்போட்ட வருமான வரித்துறை..!

மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில்  விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதிகளையும், அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருப்பது போல மதுரையிலும் இருக்க வேண்டும். தென் மாவட்ட வீரர்கள் இந்த விளையாட்டு அரங்கையே நம்பியுள்ளனர். நான் என்னுடைய தொகுதியில் குறைகள் இருப்பதாக மனு அளித்தேன், ஆனால் அவை இன்னும் செயல்படுத்தவில்லை. கேட்டால் துறை அமைச்சர்களிடம் அனுப்பி உள்ளோம், என தெரிவிக்கின்றனர். எனவே அதனையும் விரைவாக செய்து முடிக்க வேண்டும். 

அதிமுக கூட்டத்தில் கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில்களை எங்களுடைய பொதுச்செயலாளர் தெரிவிப்பார். நேரம் வரும்போது இதற்காக சொல்லப்படும். பல்வேறு இடங்களில் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். ஆணையாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கே டெங்கு பரவி உள்ளது. அவர் இந்த துறையில் இருந்தது முதலே தற்போது வரைக்கும் மிகவும் கவனமாக இருப்பார். அவருக்கே டெங்கு வந்திருக்கு என்பது மோசமான ஒன்று. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு கொசுக்களை முழுமையாக ஒலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios