Asianet News TamilAsianet News Tamil

என்ன பாத்து எப்படி சொல்லுவ.. துணிச்சல் எங்கிருந்து வந்தது..சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றிய நீதிபதி

சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி உதவித்தொகை பெறுவதாக கூறப்படுவது நகைப்புக்குரியதாக இருப்பதாக தெரிவித்த நீதிபதி, எந்த வேலையும் செய்யாமல் அரசிடம் உதவித்தொகை பெறும் ஒருவருக்கு கருவூலத்தில் இருந்து பெறும் ஒவ்வொரு பைசாவுக்கும் உழைக்க வேண்டும் என்று நினைக்கும் நீதிபதியை கேலி செய்யும் துணிச்சல் ஏற்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
 

Madurai Judge Swaminathan has filed a contempt of court case against Savukku Shankar
Author
Madurai, First Published Jul 20, 2022, 10:04 AM IST

எனது நேர்மையை கேள்விக்கு ஆளாக்கியுள்ளார்

சமூக வலை தளத்தில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் விமர்சித்து வரும் யூ டியுப்பர் சவுக்கு சங்கர் மீது நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை கிளை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:- சவுக்கு சங்கர் என்பவர் ஒரு யூடியூபர்,விமர்சகர்,தனிநபர்கள் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவைகளை கடுமையாக தாக்கி செயல்படுகிறார். அவர் கடந்த சில மாதங்களாக என் மீதும் எனது தீர்ப்புகள் குறித்தும் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.  யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை உரிய முறையில் விசாரித்து அவர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்தேன்.இதை சவுக்கு சங்கர் மோசமான வார்த்தைகளில் கண்டித்திருந்தார். எனது தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு, ஆனால் அவரது புண்படுத்தும் கருத்துகள் மூலம் எனது நேர்மையை கேள்விக்கு ஆளாக்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். நான் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்று 5 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 70,014 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக கூறியுள்ளார். 

நீதிபதியையே ரவுண்டு கட்டிய சவுக்கு சங்கர்..! வழக்கு போட சொல்லி அதிரடி காட்டிய மதுரை ஹைகோர்ட்

Madurai Judge Swaminathan has filed a contempt of court case against Savukku Shankar

கடுமையாக உழைக்கிறேன்

நான் பெறும் சம்பளம் மற்றும் சலுகைகளை அனுபவிப்பதற்கு முழுமையாக பணியாற்றி உள்ளேன் என நம்புகிறேன் .இதற்காக காலை 9.30 மணிக்கெல்லாம் பணிகளை தொடங்கி, கடுமையாக உழைத்துள்ளேன். ஆனால் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி உதவித்தொகை பெறுவதாக கூறப்படுவது நகைப்புக்குரியதாக தெரிவித்துள்ளார்.  எந்த வேலையும் செய்யாமல் அரசிடம் உதவித்தொகை பெறும் ஒருவருக்கு கருவூலத்தில் இருந்து பெறும் ஒவ்வொரு பைசாவுக்கும் உழைக்க வேண்டும் என்று நினைக்கும் நீதிபதியை கேலி செய்யும் துணிச்சல் ஏற்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.  இதுமட்டுமல்ல, அவர் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தற்போது வரை நிலுவையில் உள்ளதையும் அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண உயர்வுக்கு கவலை வேண்டாம்.. அடிக்கடி பவர் கட் பண்ணி அரசு உதவும்.. திமுகவை நக்கல் அடித்த கஸ்தூரி

Madurai Judge Swaminathan has filed a contempt of court case against Savukku Shankar

நேரில் ஆஜராக சம்மன்

எனவே அவர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடுகிறேன். பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சங்கர் மீது இதுவரை பெற்ற புகார் விவரங்களை பிரமாணப்பத்திரமாக உரிய அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பாக்கெட் சாராயம் மூலம் கள்ளக்குறிச்சி பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதா...? திடீரென வெளியான விடியோவால் பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios