தமிழக மக்கள் வறுமையில் வாடும்போது எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களுக்கு மாதம் 55 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து                                       அவர்களுக்கு சம்பள பணத்தை உயர்த்த வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானிய கோரிக்கை விவாதத்தின்போது சட்ட  சபையில் எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை 1.05 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த கே.ஏ.ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின்நிர்வாக ரீதியிலானது என்பதால் நீதிமன்றம் தலையிடாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஆனாலும், தமிழக மக்கள் வறுமையில் வாடும்போது எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா என கேள்வி எழுப்பியது.

விவசாயம், கடன் தள்ளுபடி, என பல்வேறு பிரச்சனைகளை தமிழக அரசு சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.