madurai azhagar temple car festival
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 28–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை4 மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மீனாட்சி அம்மன் மதுரை மாநகரில் ஆட்சிப் பொறுப்பேற்கும் விதமாக கடந்த 5 ஆம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான ‘திக்கு விஜயம் நடைபெற்றது.
இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
சித்திரைத்திருவிழாவின் 11–வது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
12–ம் நாளான நாளை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் இன்று மதுரை புறப்படுகிறார்.
வழிநெடுக உள்ள சுமார் 450–க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், 10–ந் தேதி அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.
