கவனத்திற்கு!! இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு.. மாற்று தேர்வு தேதி அறிவிப்பு..
சென்னை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகையான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகளின் தேதி மாற்றமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ளால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் ஆப்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, 2022 ஏப்ரல் செமஸ்டர் தேர்வு வரும் ஜூன் 2 ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு மற்றும் உறுப்புக் கல்லூரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் நேரடியாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வகையான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான ஏப்ரல் மாதம் தொடங்கும் செமஸ்டர் தேர்வுகளின் தேதி மாற்றமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 2 ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள், ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மக்களே உஷார்.! 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை.!