Weather Today ( May 27 ) Heavy rains in tamilnadu in 16 dirstrict : தமிழகத்தில் இண்ட்ரி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, கடலூர்‌ கோவை, திருப்பூர், சேலம்‌, தர்மபுரி, திண்டுக்கல், திருப்பத்தூர் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் அறிக்கை 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 

நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, கடலூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 29 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

கனமழை - எச்சரிக்கை

காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்றின் வேகத்துடன் கூடிய வானிலை கேரளா கடற்கரை, அதை ஒட்டிய கொமோரின் பகுதி மற்றும் தென் தமிழக கடற்கரையில் நிலவும் எனவே மேற்குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மேல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!