நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!
Nithyananda : ‘சமாதியில் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.
நித்யானந்தா :
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் தன்னை பரமசிவனின் அவதாரம் என கூறிக் கொண்டு பிடதியில் ஆசிரமத்தை தொடங்கினார். சித்து விளையாட்டுகளை கற்று தேர்ந்த இவருக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து 2010ஆம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நித்யானந்தா இருக்கும் காட்சிகள் வீடியோ வெளியானது. அதிலிருந்து அவர் நிறைய சர்ச்சைகளில் சிக்கினார். பெங்களூரில் ஒரு பாலியல் வழக்கு, கடத்தல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா திடீரென வெளிநாட்டு தப்பி சென்றார்.
இவரை கைது செய்ய இவரது இருப்பிடத்தை போலீஸார் அறிய முடியாமல் திணறி வருகிறார்கள். உண்மையிலேயே கைலாசா எனும் தீவு உள்ளதா, இல்லை இவையெல்லாம் கட்டுக்கதைகளா என தெரியவில்லை. வேறு ஏதேனும் நாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டின் பெயரை சொன்னால் அந்த நாட்டு போலீஸாரின் உதவியுடன் சிக்கிவிடுவோம் என்பதால் நித்தி உஷாராக இருக்கிறார். அண்மையில் ஒரு வீடியோவில் அவர் கூறுகையில் கைலாசாவில் நித்யானந்தாவின் அறைகளுக்கு கதவுகளே இல்லை. மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லை.
கைலாசா தீவு :
என் அறைக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னுடன் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிக்கிறேன்' என்று கூறினார். இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன. ‘நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை கிளப்பி வருகிறார்கள்.
நான் தற்போது சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற சில காலம் ஆகும். 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். 18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது’ என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போல் தொடர்ந்து பேஸ்புக்கில் அவரது பெயரில் பதிவிடப்பட்டு வருகிறது. இப்படி அடுத்தடுத்த குழப்பமான பதிவுகளை வெளியிட்ட இந்த நித்யானந்தா தற்போது மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.அதில் தன்னை முழுமையாக தூங்க முடியவில்லை எனவும் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார். அதோடு தற்போது வந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி தனது உடல் ஆரோக்கிய மானதாக இருக்கும் எனக் கூறியுள்ள நித்யானந்தா, தனது ஆசிரமத்தில் நிர்வாகத்தினை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று கூறி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார்.தற்போது மீண்டும் ஒரு பகீர் செய்தியை வெளியிட்டு இருக்கிறார் நித்யானந்தா.
அதில், ‘சமாதியில் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும். வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது. உடல் முற்றிலும் நச்சு தன்மை பெறுகிறது. அதனால் தான் வெளிப்புற உணவு இல்லை. அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன்.
நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும். நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன். நான் சமாதியில் இருக்கும்போது வெறுப்பாளர்கள், எதிரிகள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள். ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொவருராக பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.