WATCH | ஓய்வுபெறும் தலைமைச் செயலாளர் இறையன்புவுடன் சென்னை ஹைகோர்ட் நீதிபதி வெங்கடேஷ் சந்திப்பு!
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மரியாதை நிமித்தமாக ஓய்வு பெறப்போகும் தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு காலம் பணியில் இருக்கும் இறையன்பு இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், தலைமைச் செயலாளர் இறையன்புவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்து செயல்பட்டவர் தலைமை செயலாளர் இறையன்பு என உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் புகழாரம் சூட்டினார். ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து செயல்படுவேன் என தலைமை செயலாளர் இறையன்பு உறுதியளித்தார்.
பொதுவாக, உயர்நீதிமன்ற நீதிபதியை தலைமைச் செயலாளர் சென்று சந்திப்பது தான் மரபு. மாறாக நீதிபதியே தலைமைச் செயலாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியையும், தலைமை செயலாளர் பதவியில் நேர்மையையும் வெளிக்காட்டியுள்ளது.
தனக்கு இருக்கும் அதிகாரம் இதுதான்.. நாலரை மணி நேரத்தில் உணர்ந்த ஆளுநர்.. சபாநாயகர் அப்பாவு..!
ஓய்வு பெறும் தலைமைச் செயலாளரை, உயர்நீதி மன்ற நீதிபதி மரபையும் மீறி மதிப்புணர்வுடன் சந்தித்தது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.