Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

Madras HC says the trial against Minister K Ponmudy should go on
Author
First Published Jun 19, 2023, 5:36 PM IST

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை தொடர அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.28,37,65,600 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன், உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நிதிநுட்ப நகரம் கட்ட பிஎஸ்டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: அண்ணாமலை கண்டனம்!

இந்த வழக்கு மீதான விசாரனை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை தொடர அனுமதி அளித்துள்ளது. மேலும், 2006-11இல் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டை  தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையின் சாராம்சத்தில், முதல் குற்றவாளி சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, தவறாக பயன்படுத்தி சுரங்க உரிமம் பெற்றதாக தெரிய வருகிறது. அவரது மகன், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆதரவாக தனது உத்தியோகபூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்து, மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் உதவியுடன் வழங்கப்பட்ட அனுமதியை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டம் எதுவும் சேர்க்கப்படவில்ல என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு, தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றம் அந்த பிரிவுகளை சேர்த்து கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையை சட்டத்துக்குட்பட்டு தொடருமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios