Asianet News TamilAsianet News Tamil

"எம்.எல்.ஏ சம்பள உயர்வை ரத்து செய்ய முடியாது" - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

madras HC postponed mla salary case
madras HC postponed mla salary case
Author
First Published Aug 4, 2017, 2:53 PM IST


சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களுக்கு மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர்களுக்கு சம்பள பணத்தை உயர்த்த வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

madras HC postponed mla salary case

அதன்படி அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானிய கோரிக்கை விவாதத்தின்போது சட்ட சபையில் எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை 1.05 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த கே.ஏ.ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின் நிர்வாக ரீதியிலானது என்பதால் நீதிமன்றம் தலையிடாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios