வேந்தர் மூவிஸ் மதன் வழக்கில் விசாரணைக்காக அதற்கென அமைக்கப்பட்ட விசாரணை குழு முன்பு இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆஜராக சம்மன் அனுப்பபட்டதை தொடர்ந்து அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர்.
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் மாயமானார். அவர் 100 மேற்ப்பட்ட மாணவர்களிடம் ரூ 84 கோடி வரை கையாடல் செய்துவிட்டு பணத்துடன் மாயமானார். இது பற்றி விசாரிக்க பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.
மதனை 6 மாத காலமாக தேடி வந்த போலீசார் கடந்த வாரம் திருப்பூரில் கைது செய்தனர். இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மதனை விசாரிப்பதற்காக கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையில் காவல் அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதனை 7 நாள் காவலில் எடுத்து, இன்று ஐந்தாவது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதன் மோசடி செய்த பணம் தொடர்பான ஆவணங்கள், மற்றும் சான்றுகளை கண்டுபிடிப்பதற்காக, கூடுதலாக இரண்டு அதிகாரிகள் நியமி த்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மதனுக்கு நெருக்கமானவர்கள் , மதனுடன் வியாபார ரீதியாக் தொடர்பு வைத்திருந்தவர்கள் என அனைவரையும் விசாரணைஅதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதன் தலைமறைவாக இருந்த போது திருப்பூரில் கடைசியாக பதுங்கி இருந்துள்ளார்.
அப்போது அவரை சினிமா துறை பிரபலங்கள் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்த ரகசிய தகவலையும் போலீசார் எடுத்து விட்டனர். போன் கால் டீடெய்ல் , வர்ஷினி வாக்குமூலம் , மதனிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில் மேற்கண்ட தகவலை போலீசார் திரட்டினர்.
இந்நிலையில் மதனிடம் பெறும் வாக்குமூலம் அடிப்படையில் மதனுக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன் சிவா , பெருமாள் ஆகியோரை போலீசார் இன்று விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பினர்.
இவர்களிடம் மதனிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில் விசாரணை நடக்கும். அதன் பின்னர் மதனை நேரில் வைத்தும் விசாரணை நடக்கும் என தெரிகிறது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா மதனுக்கு நெருக்கமானவர். அவர் மூலம் திரைப்பட ந்க்கள் தயாரிக்கும் பணி நடந்துள்ளது.
இன்று விசாரணைக்கு ஆஜரான சிவா, பெருமாள் தவிர மேலும் முக்கிய பிரபலங்கள் அழைக்கப்படலாம் என தெரிகிறது.
