கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தி.மு.க.வின் வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றியவர். பல தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றிப் பெற்ற செய்தவர் என்று மு.க.அழகிரிக்கு பலமாக சப்போர்ட் வாங்கியுள்ளார் பொன்.இராதாகிருஷ்ணன்.

தொடர்புடைய படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேசுவரர் கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார் மத்திய மந்திரி பொன்.இராதாகிருஷ்ணன். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "ரஃபேல் போர் விமானம் குறித்து முதலில் ராகுல் காந்தி விளக்கம் தரவேண்டும். பின்னர், மோடி இதற்கான விளக்கத்தை தருவார் என்று கூறிய பொன்.இராதாகிருஷ்ணன், "பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறுத் திட்டங்களை போட்டு வருகிறார். அதிலும் தமிழ்நாட்டிற்காக பலத் திட்டங்களைத் தீட்டி வருகிறார்" என்றார்.

modi க்கான பட முடிவு

"அதுமட்டுமா தி.மு.க., அ.தி.மு.க. செய்யாத அளவுக்கு தமிழகத்திற்கு அதிகத் திட்டங்களை மோடி வகுத்துள்ளார். பாலாறு - தென்பெண்ணை ஆறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.648 கோடி ஒதுக்கியுள்ளார்" என்று உதாரணமும் காட்டியுள்ளார்.

"தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் குறித்து மோடி கூறியுள்ளார். இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

m.k.alagiri க்கான பட முடிவு

பின்னர், தி.மு.க. குறித்து பேசிய பொன்.இராதகிருஷ்ணன், "கருணாநிதி இறந்தபிறகு தி.மு.க.வைப்  பற்றி குறை கூறுவது நாகரிகமாக இருக்காது. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, தி.மு.க.வின் வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றியவர். பல இடைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றிப் பெற்ற செய்தவரும் அவர்தான்" என்று அழகிரிக்கு சப்போர்ட் வாங்கினார் பொன்.இரா.

மேலும், "மு.க.ஸ்டாலின் மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என பல பதவிகளில் இருந்தவர். கனிமொழி எம்.பி.யாக இருந்தவர். எனவே, தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்" என்றவர், "எந்தக் கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜ.க.வுக்கு கிடையாது" என்று கூறினார்.

stalin and edappadi க்கான பட முடிவு

இவ்வளவு சொன்னவர் கூட்டணிப் பற்றியும் கூறினார். "எந்தத் தேர்தலிலும் நாங்கள் முதல் நிலைக் கட்சியாக இருப்போம். நாங்கள் வகுத்து வரும் கூட்டணி வியூகங்கள் பற்றி தெரியாததால்தான் அந்தக் கட்சியை ஆட்டிப் படைக்கிறோம், இந்தக் கட்சியை ஆட்டிப் படைக்கிறோம் என்று குறை கூறுகின்றனர்" என்று தெரிவித்தார்.