Asianet News TamilAsianet News Tamil

அனுமதி இல்லாததால் ஆழ்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்.. திருப்பி அனுப்பியது புதுச்சேரி அரசு..

சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசுகப்பல் அனுமதியில்லாததால் திருப்பி அனுப்பட்டது. புதுச்சேரி அரசின் அனுமதியின்றி வந்ததையடுத்து சொகுசு கப்பலை கடலோர காவல்படை திருப்பி அனுப்பியது.
 

Luxury ship not get permission in Puducherry - tourist disappointment
Author
Puducherry, First Published Jun 10, 2022, 11:09 AM IST

சென்னை - புதுச்சேரி இடையே சொகுசு கப்பல் திட்டத்தை சென்னை துறைமுகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தனியாருக்கு சொந்தமான காட்லியா சி குரூஸ் என்னும் இந்த சுற்றுலா சொகுசு கப்பல், சென்னை துறைமுகத்திலிருந்து அண்மையில் புறப்பட்டது. மேலும் இந்த கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வழியாக சென்று வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்தடையும் என்றும் கூறப்பட்டது.

மேலும் படிக்க: தமிழகத்தில் கொரோனா 4 வது அலையா? கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துக..அலறும் ஓ.பி.எஸ்

இந்நிலையில் பிரம்மாண்ட சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அனுமதியளிக்க கூடாது என்று புதுச்சேரி அதிமுக மற்றும் பொது நல அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பலில் மதுக்கூடம், நடனம், சூதாட்டம் உள்ளிட்ட கலாசாரத்துக்கு எதிராக செயல்பாடு இருக்கும் என்பதால் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதுதொடர்பாக பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, இந்த சொகுசு கப்பல் தொடர்பாக எந்தவித தகவலும் புதுச்சேரி அரசுக்கு வரவில்லை என்றும் எங்களிடம் இருந்து எந்த ஒரு அனுமதியும் அளிக்கபடவில்லை என்றும் விளக்கமளித்தார். மேலும் சொகுசு கப்பல் புதுச்சேரி வந்தாலும் சூதாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே புதுச்சேரி அரசு தரப்பிலும் எந்த வித அனுமதி தரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காட்லியா சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை காலை புதுச்சேரி அருகே கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது. இருப்பினும் புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில் கீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கப்பலை கடற்கரை பகுதியில் இருந்தப்படி மக்கள் பார்வையிட்டனர். மேலும் புதுச்சேரி அனுமதி அளிக்காததால் ஆழ்கடலில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால், சொகுசுக் கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் படிக்க: எம்ஜிஆரை தவிர சினிமாவில் யாரும் யோக்கியர் அல்ல.! நடிகைகளை பற்றி தொடர்ந்து பேசுவேன்-பயில்வான் ரங்கநாதன் அதிரடி

Follow Us:
Download App:
  • android
  • ios