Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆரை தவிர சினிமாவில் யாரும் யோக்கியர் அல்ல.! நடிகைகளை பற்றி தொடர்ந்து பேசுவேன்-பயில்வான் ரங்கநாதன் அதிரடி

நயன்தாரா - விக்னேஷ் சிவன்  திருமணம் யானைமேல் அம்பாரி ஊர்வலம் போல 25கோடி செலவில் நடந்துள்ளதாக திரைப்பட நடிகரும் விமர்சகருமான  பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Except for MGR in Tamil cinema  No one is good says film actor Bayilvan Ranganathan
Author
madurai, First Published Jun 10, 2022, 9:30 AM IST

25 கோடி செலவில் திருமணம்

நடிகர் மற்றும் நடிகைகளை பற்றியும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசிவருபர் நடிகர் பயில்வான் ரங்கநாதன், இவருக்கு தமிழ் திரையுலகத்தினர் கண்டனம் தெரிவித்தும் காவல்நிலையத்தில் புகார் அளித்துனர். இதனிடையே பிரபல பின்னனி பாடி சுசித்திராவைப்பற்றி தனியார் தொலைக்காட்சியில் ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுசித்திரா பயில்வான் ரங்கநாதனுக்கே போன் போட்டு சண்டையிட்டார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.இந்தநிலையில்  மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில்  மதுரை ராஜாஜி மருத்துவமனை அவரசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காயம் பிரிவில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினார்.  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ்சிவன் திருமணம் 25கோடி ரூபாய் செலவில் யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளதாக தெரிவித்தார். தனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து அதனை நடத்தியது கிடையாது என தெரிவித்தார்.

Except for MGR in Tamil cinema  No one is good says film actor Bayilvan Ranganathan

 

யாரும் யோக்கியவர் இல்லை

 நடிகைகளின் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன், நடிகர், நடிகைகளை பற்றி நான் சமூக வலை தளத்தில் கூறுவதை கேட்க 3லட்சம் பேர் இருப்பதாக தெரிவித்தார். தன்னை தொடர்ந்து பேசுங்கள் எனவும் பொதுமக்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் கூறுவதாகவும் குறிப்பிட்டார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரை தவிர யாரும் யோக்கியர் அல்ல எனவும், தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர் , நடிகைகளும் சம்பாதித்ததை பயன்படுத்தி பள்ளி, மருத்துவமனை, மஹால் தான் கட்டுகிறார்களே தவிர மக்களுக்கான எந்த உதவியும்  எதுவும் செய்வதில்லை அதனால் நடிகர்கள் தலைவர் ஆவதை ஏற்க இயலாது என கூறினார். நான் யாரை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை எனவும், சட்டத்திற்கு உட்பட்டே பேசுவதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

திருமணத்தில் கலந்து கொண்டால் பைக் பரிசு..! விருந்தினருக்கு இலவசமாக பைக் வழங்கி அசத்திய மணமக்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios