டெண்டர் விதிமுறையில் எண்ணெய் நிறுவனம் திருத்தம் செய்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

 மாநில அளவிலான டெண்டர் முறையை கண்டித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் 4 ஆயிரத்து 200 எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் 12ஆம் தேதி முதல் இயங்கவில்லை.

போராட்டம் குறித்து மும்பையில் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை.

இந்நிலையில் இன்று மீண்டும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூடி அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். 
 
அதில் டெண்டர் விதிமுறையில் எண்ணெய் நிறுவனம் திருத்தம் செய்ததால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு வந்தது.