கன்னியாகுமரியில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் அஜித். கட்டுமான பணியாளரான இவர், தனது உறவுக்கார பெண்ணான 11 ஆம் வகுப்பு மாணவி ஆனந்தியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அஜித் அரளிக்காயை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனை அறிந்த காதலி அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவரும் அரளிக்காயை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டார். ஒரே பகுதியை சேர்ந்த இளைஞரும், பள்ளி மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.