அரியலூர்

அரியலூரில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி மிரட்டிய லாட்டரி வியாபாரியை காவலாளர்கள் கைது செய்தனர்.  

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம், கச்சேரி சாலையில் வசித்து வருபவர் ராமதாஸ் மகன் சம்பத் (45).

இவர் நேற்று காலை  தா.பழூர் சாலையில் லாட்டரி சீட்டு விற்று வியாபாரம் செய்கிறார் என்ற தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட காவலார்கள் சம்பவ  இடத்திற்குச் சென்று சம்பத்தை பிடிக்க  முயன்றனர்.

அப்போது சம்பத் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனையடுத்து அவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர் விற்பதற்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.