lorry strike continues as third day

தமிழகத்தில் லாரிஉரிமையாளர் போராட்டம் கடந்த இருதினங்களாக நடைபெற்று வருகிறது. ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை அனைத்து மாவட்டதிலும் தொடரும் வேளை நிறுத்தத்தால் பலகோடி ருபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் மஞ்சள், ஜவுளி, முட்டை என அத்தியாவசிய பொருட்கள் பெருமளவு தேக்கமடைந்துள்ளது. முன்றாவது நாளாக தொடரும் வேளை நிறுத்தம் தொடர்பாக மாநில அரசு இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த வில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் பேச்சுவார்த்தை நடத்தி அதில் சுமுக முடிவு எட்டப்பட்டால் தான் வேலைநிறுத்தம் வாபஸ்பெறப்படும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் இன்றுமாலைக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.