கடந்த 8-ந் தேதி முதல் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

எனவே, 24ம் தேதி வரை சுங்க கட்டணம் ரத்து, விமான நிலையங்களில் பார்க்கிங் இலவசம், வீடு மற்றும் கார் கடன் கட்ட கால அவகாசம் என மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியது.

இந்நிலையில், சுங்ககட்டணம் ரத்து என மத்திய அரசு அறிவித்தது இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரை போதுமான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வராததாலும், சில்லரை தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதாலும் சுங்க கட்டண வசூலை வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து தென் மாநில லாரி உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

பழைய ரூபாய் நோட்டு பிரச்சினையால் தற்போது 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுங்க கட்டண வசூலை டிசம்பர் 31-ந் தேதி வரை தள்ளி வைக்காவிட்டால் இன்று இரவு முதல் தென்னிந்தியாவில் லாரிகள் ஓட வாய்பில்லை என தெரிவித்தார்.