சென்னை ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுவனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி மாலை தீப்பிடித்தது. சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலம் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் அதில் சிக்கி கொண்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை கவுந்தம்பாடியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி
நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் எடப்பாடியைச் சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று
உயிரிழந்தனர். குரங்கணி வனப்பகுதியில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், சென்னை ட்ரெக்கிங் கிளப் மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரான பீட்டர் வான்கே தற்போது தலைமறைவாக உள்ளார்.  பீட்டர் மீது தேனி
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சென்னை ட்ரெக்கிங் கிளப்பை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள பீட்டர் வான்கே, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டாரா? அல்லது இந்தியாவில்தான் இருக்கிறாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். பீட்டர், வெளிநாட்டுக்குத் தப்பிவிடாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை தமிழக போலீ