மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி

39 தொகுதிகளில் 950 பேர் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். இவர்களில் 874 ஆண்கள், 76 பெண்கள் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 8 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியில் இருக்கின்றனர்.

Lok Sabha Elections 2024: 950 candidates contest in 39 constituencies in Tamil Nadu sgb

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 950 வேட்பாளர்கள் தயாராக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஒன்றரை மாதம் கழித்து ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. அன்றைய தினமே முடிவுகளும் தெரியவரும்.

முன்னதாக இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 முதல் 27 வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களைச் சரிபார்த்து, பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள் 664 மனுக்களை நிராகரித்தனர்.

மனைவியை பேய், பிசாசுன்னு சொன்னா தப்பு இல்லையாம்! பாட்னா உயர் நீதிமன்றம் கொடுத்த விளக்கம்!

Lok Sabha Elections 2024: 950 candidates contest in 39 constituencies in Tamil Nadu sgb

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 1085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று (மார்ச் 30) மாலை 5 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி 135 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

அதன்படி, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ளது். 39 தொகுதிகளில் 950 பேர் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். இவர்களில் 874 ஆண்கள், 76 பெண்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 8 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியில் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் புதுசா வந்த வானிஷ் மோட்! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுகோங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios