நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
Lok Sabha Election 2024 Live: நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு தகவல்!
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்கு சதவிகிதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவு. கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44%, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

Loksabha election 2024 பரந்தூர், வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை பரந்தூர், வேங்கைவயல் மக்கள் புறக்கணித்துள்ளனர்
மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்: இவிஎம் இயந்திரங்களுக்கு தீ வைப்பு!
மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நிறைவடைந்தது முதற்கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குப்பதிவு!
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா!
இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார்
அயோத்தி ராமர் கோயில்: அன்சாரி குடும்பத்துக்கு மோடி புகழாரம்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அன்சாரி குடும்பம் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்
கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!
கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும்: வி.கே.சசிகலா!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்
இபிஎஸ் எங்கு இருக்காரே தெரியல.. இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும்.. ஓ.பன்னீர் செல்வம் சரவெடி!
2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான தளபதி விஜய் வாக்களித்தார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்
சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்.
முதல் ஆளாக வந்து வாக்களித்தார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 24.37%
தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 24.37% பதிவாகியுள்ளது. அதிகபட்ச கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்ச மத்திய சென்னையில் 20.09 சதவீதமும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.