இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா!
இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. காலை முதலே பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் கோயில் திருமாளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய் மாமா தெட்சிணாமூர்த்தி தனது 101 வது வயதில் வாக்களித்தார்.
அயோத்தி ராமர் கோயில்: அன்சாரி குடும்பத்துக்கு மோடி புகழாரம்!
இந்தியா கூட்டணி நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் தமிழ்நாடு முதலமைச்சரின் தாய் மாமாவை அழைத்து வந்து வாக்களிக்க உதவி செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வரின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி, இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் வை.செல்வராஜ், தமிழகத்தில் தளபதி மு.க ஸ்டாலின் அறிவித்தது போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.