local holiday for vadalur thai poosam function
வரும் ஜனவரி 31ம் தேதி தைப்பூச விழாவை ஒட்டி, வடலூரில் ஜோதி தரிசன பெருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஜன.31ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், வரும் 31.1.2018 புதன்கிழமை தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடைபெறுவதால், கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதட்தில் பிப்ரவரி மாதத்தில் விடுமுறை நாளான 17.02.2018 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப் படுகிறது.
உள்ளுர் விடுமுறை நாளாக அறிவிக்கப் படும் ஜன.31 புதன் அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள், அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, குறைந்த பட்ச பணியளர்களுடன் செயல்படும் என்று கூறியுள்ளார்.
