MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?

Tamilnadu Tasmac Shop Close: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4829 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்துகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 15 2026, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டாஸ்மாக் கடைகள்
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4829 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்துகிறது. தினமும் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தினமும் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும். அரசு இயந்திரமே டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை வைத்து தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது.

25
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
Image Credit : Asianet News

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடிசி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Related image2
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
35
17ம் தேதி முதல் வரை டாஸ்மாக் கடைகள் மூடல்
Image Credit : our own

17ம் தேதி முதல் வரை டாஸ்மாக் கடைகள் மூடல்

இந்நிலையில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரை அழைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வரும் 17ம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளன. இதற்கான நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளது.

45
டாஸ்மாக் ஊழியர்கள் திட்டவட்டம்
Image Credit : our own

டாஸ்மாக் ஊழியர்கள் திட்டவட்டம்

அதில் நாளை இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி சாவியை நிர்வாகத்திடம் கொடுத்து விடுவதாகவும் 17ம் தேதியில் இருந்து பணிக்கு செல்ல மாட்டோம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் கலந்து கொள்ளுமா என்பது தெரியவில்லை.

55
குடிமகன்கள் அதிர்ச்சி
Image Credit : our own

குடிமகன்கள் அதிர்ச்சி

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை முறியடிக்க டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்கூட்டியே சரக்கு வாங்க தயாராகி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு அரசு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image2
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Recommended image3
பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி.! ஞாயிற்றுக்கிழமை இன்று மற்றும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Related Stories
Recommended image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image2
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved