கொடைக்கானலில், அடையாளம் தெரியாத வாகனம் ஏற்றியதில் 2 வயது சிறுத்தைப் பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொடைக்கானல் பகுதிகளில் அடிக்கடி யானைகள், சிறுத்தைப் புலிகள், சிறுத்தைப் பூனைகள், காட்டு எருமைகள் என பல்வேறு காட்டு விலங்குகள் ஊர்ப் பகுதிக்கு வருவது வழக்கம்.

அப்படி வரும் விலங்குகள் சில சமயங்களில் சாலைப் பகுதி வழியாக ஊருக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும்.

இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள ஏரிச்சாலையில் சாலையில் சிறுத்தைப் பூனை ஒன்று இருந்தது. அப்போது சாலையைக் கடக்க முயன்றபோது சிறுத்தைப் பூனை மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சிறுத்தைப் பூனை மீது ஏறியது. விபத்து ஏற்படுத்திய அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், அந்த சிறுத்தைப் பூனையின் தலையில் பலத்த அடிப்பட்டு இரத்தம் கசிந்தது. இதனால், அந்த சிறுத்தைப் பூனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தைப் பூனையில் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.