சென்னை காயிதே மில்லத் கல்லூரி விடுதியில் நேற்றிரவு மாணவிகள்  சாப்பிட்ட இட்லியில் பல்லி விழுந்ததால் 104 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி விடுதியில் 350 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

நேற்றிரவு  மாணவிகள் சாப்பிட்ட இட்லியில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 104 மாணவிகளும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து விடுதிக்கு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ளவர்கள் இன்று மாலைக்கும் வீடு திருப்புவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகயின் பெற்றோர் கல்லூரியை முற்றுகையிட்டனர். இதையடுத்து விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு வரும் 30 ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாணவிகள் விடுதியை உணவுப்பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்