திருவள்ளூர்

திருவள்ளூரில், தாய் கண்டித்ததால் குடிக்கு அடிமையான 15 வயது மகன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை - பாலவாக்கம் அருகில் உள்ளது சீனிக்குப்பம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. இவர் செங்கரையில் உள்ள காட்டுச்செல்லி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார்.இவரது மகன் சூர்யா (15). 

ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய சூர்யா கட்டடத் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்ததார். சூர்யாவுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு சிறு வயதிலேயே குடிக்கு அடிமையானார். அவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றுவதை வாடிக்கையாக மாற்றிக் கொண்டார். 

இந்த நிலையில்தான், கடந்த செவ்வாய்க்கிழமை சூர்யா அளவுக்கதிமாக குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.  இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் போதையில் வேதனையடைந்தார் சூர்யா. 

உடனே, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். நீண்ட நேரம் மயக்கத்தில் இருக்கவே அவரது தாயார், சூர்யாவை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சூர்யா சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் நித்தியானந்தம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தாய் கண்டித்ததால் குடிக்கு அடிமையான 15 வயது மகன் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.