நாடா புயல் காரணமாக 5 கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அளித்துபள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வங்க கடலில் உருவாகியுள்ள, ‛நாடா' புயல் டிசம்பர் 2ம் தேதி புதுச்சேரி மற்றும் வேதாரண்யம் இடையே, கடலூர் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதனால், சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கும். பின், படிப்படியாக அதன் தீவிரம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.