மதுரை மீனாட்சியம்மன் கோவில்.. முதல் முறையாக பொறுப்பேற்கும் பெண் தக்கார் சோபனா ராமச்சந்திரன் - யார் இவர்?
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக, முதல் முறையாக பெண் ஒருவர் பொறுப்பேற்கிறார். அவருடைய பெயர் சோபனா ராமச்சந்திரன். இதுவரை அங்கு தக்காராக இருந்து வந்த கரு முத்து கண்ணனுக்கு பதிலாக சோபனா பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தலைவராகவும், தக்கராகவும் பணியாற்றி வந்த பிரபல தொழிலதிபர் கரு முத்து கண்ணன் அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு காலமானார். கடந்த 18 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தக்காராக பணியாற்றி வந்த கரு முத்து கண்ணன் அவர்கள் அவருடைய எழுபதாவது வயதில் மரணமடைந்தார்.
இந்நிலையில் தற்போது அவருடைய பதவிக்குத் தான் ஷோபனா ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தக்காராக பணியாற்றவுள்ள முதல் பெண் தக்கார் Shobana Ramachandran என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சோபனா ராமசந்திரன்?
ஆண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள வாகனத் துறையில், ஷோபனா ராமச்சந்திரன் ஒரு தனித்துவமான ஆளுமையாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல. டிவிஎஸ் டயர்ஸ் என்ற பிராண்டின் கீழ் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்களை விற்பனை செய்யும் அவரது டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து சீரான பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 1985ம் ஆண்டு டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரின், நிர்வாக உதவியாளராக, டிவிஎஸ் டயர்ஸில் தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் 1986 முதல் அவர் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஷோபனாவின் தலைமையின் கீழ், TVS டயர்கள் 31 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. நாட்டின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்களில் முதலிடத்தை அவருடைய நிறுவனம் பெற்றுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் பற்றவைத்த நெறுப்பு இன்று நாடு முழவதும் படர்ந்து எரிகிறது - திருமாவளவன்