Asianet News TamilAsianet News Tamil

அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கறிஞர்கள்! அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநர்!

Lawyers struck the bus driver
Lawyers struck the bus driver
Author
First Published Feb 23, 2018, 12:11 PM IST


சிவகங்கையில் வழக்கறிஞர்கள் தாக்கியதால் மனவேதனையடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையை சீரமைக்கக்கோரி வழங்ககறிஞர்கள் சங்கத்தினர் நேற்று பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்தினர். சாலையை சீரமைக்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, வழக்கறிஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Lawyers struck the bus driver

பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சியில் இருந்து பரமக்குடி செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் செல்வராஜ் இயக்கியுள்ளார். ஆனால், பேருந்தை நிறுத்தக்கோரி வழக்கறிஞர்கள் கூறினர். ஆனாலும், ஓட்டுநர் செல்வராஜ் பேருந்தை இயக்க முற்பட்டார். அப்போது ஓட்டுநருக்கு, வழக்கறிஞர்களுக்கிம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஓட்டுநர் பேருந்து இயக்கியதில், வழக்கறிஞர் தங்கபாண்டியன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற வழக்கறிஞர்கள், ஓட்டுநர் செல்வராஜை தாக்கினர். பேருந்துவில் இருந்த செல்வராஜை, வழக்கறிஞர்கள் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Lawyers struck the bus driver

இந்த நிலையில், பணி முடிந்த வீடு திரும்பிய செல்வராஜ், வழக்கறிஞர்கள் தன்னை பலரது முன்னிலையில் தாக்கியதை நினைத்து மிகுந்த வேதனை அடைந்துள்ளார். அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது செல்வராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios