Lawyers protest demonstrated to permanently close the Sterlite plant ...

விருதுநகர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி விருதுநகரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நேற்று வழக்கறிஞர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காவல்துறையினர் கொன்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாத்தூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.