நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் சட்ட முன் வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம், தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார்

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

மேலும், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் 

ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், தமிழக அரசின் சட்ட முன் முடிவை இன்று சமர்ப்பிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், டெல்லி சென்ற தமிழக சுகாதர துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக சட்ட முன் வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.