திருப்பூர் சாமாளபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஐந்து மணி நேரத்திற்கும் மேல், போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது .

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நெடுஞ்சாலை ஓரம்  டாஸ்மாக்  மதுபானக்கடை இயங்கி வருகிறது. இதனை மூட கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் போராட்டம் நடத்தினர் 

இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போராட்டக்காரர்களை களைந்து போகக் கூறி போலீசார்  எச்சரிக்கை  விடுத்தனர். அப்போது அந்த வழியாக  சூலூர்  எம் எல் ஏ கனகராஜ்  வந்தார் . அவரை வழிமறித்தபொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை  மூடுவதற்கு வழி செய்ய வேண்டும் என்று அவரை சிறை பிடித்தனர் .

இதன் காரணமாக   சூலூர் எம்எல்ஏ அங்கிருந்து செல்வதற்கு முடியாமல் தவித்ததாக தெரிகிறது.இதையடுத்து காவல் துறை அதிகாரிகளுக்கு   தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த அதிரடி படை  போலீசார் , அங்கிருந்த  பொது மக்களை  கண் மூடித்தனமாக  தாக்கினர் .

அப்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்  ஒரு பெண்மணியின் கன்னத்தில் ஓங்கி பளார் என நடு ரோட்டில் அடித்தார்.அதனை தொடர்ந்து, பலரது  மண்டை உடையும் அளவுக்கு போலீசார் கண் மூடித்தனமாக தாக்கினர்.

இதனால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .