lakshmi puram village people Protesr Against Panneerselvam for Water

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட, லெட்சுமிபுரம் ஊராட்சியில் ஓபிஎஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் நான்கு ராட்சத கிணறுகள் தோண்டி யதால் லெட்சுமிபுரம் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் விவசாய நிலத்திற்கும் நீரின்றி விவசாயம் பட்டுப் போய் விட்டது. நான்கு ராட்சத கிணறுகள் தோண்டியும் நீர் போதவில்லை என்ற காரணத்தால் 5 வதாக மேலும் ஒரு ராட்சர கிணற்றினை ஒ.பி.எஸ். தனக்குச் சொந்தமான தோட்டத்தில் தோண்டிய தால் லெட்சுமிபுரம் ஊராட்சி கிராமத்தைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் என்று அனைத்துத் தரப் பினரும் தங்களது வீடுகள், கடைகள் என்று அனைத்தையும் மூடி விட்டு, ஓபிஎஸ் தோட்டத்தில் உள்ள கிணற்றினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு ஓபிஎஸ்க்கு எதிராக முழக்கம் எழுப்பிய கிராம மக்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பெண்கள் என்றும் பாராமல் போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கியதால் பெண்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. தடுக்க வந்த ஆண்களையும் போலீசார் தாக்கியதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

ஓபிஎஸ் க்கு சொந்தமான தோட்டம் மற்றும் நிலத்தினைச் சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ள தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் லட்சுமிபுரம் மக்கள் கடைகளை அடைத்தும் பேருந்துகளை சிறை பிடித்தும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்காகன பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.