நீட் தோவுக்கு எதிரான போராட்டத்தின்போது, பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம்  அத்துமீறி நடந்துகொண்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உயராதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். 
இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி 

மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவையில் நடந்த போராட்டத்தின் போது ஒரு போலீஸ் அதிகாரி , பெண் சப் இன்ஸ்பெகடரிடம்  தவறாக நடந்து கொண்டவீடியோ வெளியிட்டுள்ளது.

கூட்டத்தை கட்டுபடுத்தும் சாக்கில்  ஒரு போலீஸ் அதிகாரி தனது ஜூனியர், பெண் சப் இன்ஸ்பெக்டரை  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அந்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. கூட்டத்திற்குள் சிக்கி கொண்ட அந்த பெண் சப் இன்ஸ்பெக்டரை , உயரதிகாரி தகாத இடங்களில் தொடுட்டுள்ளார்.

கோயமுத்தூர் போலீஷ் கமிஷனர்  அமல்ராஜ் இந்த வீடியோவை கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.