திருவொற்றியூர் பூம்புகார் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வி (65). நேற்று காலை செல்வி, பொன்னேரி அடுத்த வேப்பம்பட்டில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டில் இருந்து திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு சென்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அங்கு டிக்கெட் வாங்கி கொண்டு, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்,சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.

தகவலறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.