கடும் வறட்சியால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும், தண்ணீர் இல்லாமல் வற்றிப் போயிருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் சுமாராக இருந்த நிலையிலும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் விழுந்தது. ஆனால், நாள்கள் செல்ல செல்ல வறட்சி அதிகரித்து வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தண்ணீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

இந்நிலையில் மெயினருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. ஆண்கள் பகுதியிலும், பெண்கள் பகுதியிலும் தண்ணீர் விழுவது குறைந்தது முற்றிலும் நின்றுவிட்டது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் விழுவது நின்றது.

இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் முற்றிலும் குறைந்து உள்ளது.

வெயில் குறைந்து இதமான சூழல் நிலவும் நிலையிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்த போது ஏற்பட்ட வறட்சி குற்றாலத்தையும் பாதித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.