Kurangani fire accident death roll increased to 22

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழதோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி என்ற பெண் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.



9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தற்போது மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.