சென்னை மக்களின் தாகம் தீர்க்கப்படுமா? கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம கன அடி நீர் திறக்‍கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிற்கு நான்கு நாட்களில் வந்தடையும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிதுள்ளனர். 

சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய, கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி, முதலமைச்சர் ஓபிஎஸ், ஆந்திர முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, ஆந்திர மாநில அரசு, கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விட்டுள்ளது.

இந்தத் தண்ணீர் கண்டலேறு அணையிலிருந்து 152 கிலோமீட்டர் தூரத்தை கடந்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிற்கு நான்கு நாட்களில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.

ஜீரோ பாயிண்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூண்டி சத்திய மூர்த்தி நீர் தேக்கத்தை வந்தடையும் கண்டலேறு தண்ணீர், இங்கிருந்து பேபி கால்வாய்கள் மூலமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு நவீன முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் சென்னை மாநகர  மக்களின் குடிநீர் தேவைக்கு விநியோகிக்கப்படும் என  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.