ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நிதி நீர் இன்று காலை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக தமிழக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, கண்டலேறு அணையில் இருந்து கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் கிருஷ்ணா நதியில் ஆந்திர அரசு தண்ணீர் திறந்துவிட்டது.

இந்நிலையில், முன்னறிவிப்பின்றி, கிருஷ்ணா நதியில் திறந்துவிடப்பட்டு வந்த தண்ணீர் இன்று காலை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.