kovai gun fight

கோவையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் காவலாளியை குடிபோதையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த தென்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் ஹோட்டல் கல்லாவில் உட்காந்திருந்த செல்வகுமார் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஹோட்டலுக்குள்ளே வந்த பூனையை விரட்டுவதற்காக ஓட்டல் உரிமையாளர் பிளாஸ்டிக் குண்டு மூலம் சுடும் விளையாட்டு துப்பாக்கி யைப் பயன்படுத்தி பூனையை விரட்ட சுட்டபோது, அது எதிரே வந்த காவலாளி தேவராஜ் மீது பட்டது.

இதையடுத்து காயமடைந்த கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து தென்னம்பாளையம் போலீசார் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.