கூடங்குளம் 2வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள 2-வது அணுஉலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

இதனிடையே திடீரென்று செப்டம்பர் 6-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டடு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

இந்நிலையில், கூடங்குளம் 2வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அணுஉலையின் டர்பைனில் நடக்கும் தொழில்நுட்ப ஆய்வு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இன்று இரவுக்குள் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் எனவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.