kodanadu estate watchman murder case heavy investigationby police

கொடநாடு கொலையில் தொடர்புடைய கனகராஜ் மனைவி கலைவாணியிடம் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா விசாரணை நடத்தி வருகிறார்.
ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்மான முறையில் கொலை செய்யபட்டார். மேலும் ஒரு காவலாளி படுகாயமடைந்தார். 
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் திடீரென விபத்தில் மரணமடைந்தார். 
மேலும் மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் சயான் என்பவரும் அதேநாளில் விபத்தில் சிக்கினார். அப்போது அவருடன் காரில் வந்த அவரது மனைவியும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
இரண்டு விபத்துகளும் ஒரே நாளில் நடந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில், தற்போது கனகராஜ் மனைவி கலைவாணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.