Asianet News TamilAsianet News Tamil

கொடநாடு காவலாளி கொலை வழக்கு - சயானிடம் கேரளா போலீசார் தீவிர விசாரணை...

kodanad watchman murder case - kerala police investigate to accuse sayan
kodanad watchman-murder-case---kerala-police-investigat
Author
First Published Apr 29, 2017, 9:15 PM IST


கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான சயானிடம் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.

அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரேதபரிசோதனையில் சயானின் மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுகாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளா போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சயானின் மனைவி, மகள் உடல்கள்  திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios